பிரதமர் மோடியின் 75 வது பிறந்த நாளையொட்டி பல்வேறு விழா ஏற்பாடுகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவரது சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மிகப்பெரிய போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'பிரதமர் மோடிக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுள் கிடைக்க எனது வாழ்த்துக்கள்' என தெரிவித்துள்ளார்.