நடப்பாண்டில் நான்காவது முறையாக மேட்டூர் அணை நிரம்பி இருக்கும் நிலையில் மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது மேட்டூர் அணையின் 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 82,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் மூலம் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 18,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 75 ஆயிரம் கன அடியிலிருந்து தற்போது ஒரு லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.