Advertisment

செஞ்சி மஸ்தான் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய மரூர் ராஜா !

Masthan

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் 22 பேர் உயிர் பலிக்கு காரணமான மரூர் ராஜாவால் திமுகவின் மூத்த உறுப்பினரான செஞ்சி மஸ்தானின் அமைச்சர் பதவி பறி போனது. மேலும், திண்டிவனம் நகராட்சி இளநிலை உதவியாளரை சாதிய ரீதியாக காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட வைத்த விவகாரத்தால் ஒட்டுமொத்த அரசியல் வாழக்கைக்கே முற்றுப்புள்ளியை வைத்துள்ளார்.   

Advertisment

திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருபவர் முனியப்பன், இவரிடம் திண்டிவனம் நகராட்சி 20வது வார்டு பெண் கவுன்சிலர் ரம்யா 29.08.2025 தேதி அன்று இவருக்கு சம்பந்தமே இல்லாத ஒரு ஒப்பந்ததாரரின் ஆவணத்தை கேட்டு அவரை கொடுக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். முனியப்பன் நான் ஆணையரிடம் அனுமதி பெற்றப்பின் தருகிறேன் என எடுத்துச் சொல்லிய நிலையில், ரம்யா  முனியப்பனிடம் மீண்டும் பைலைக் கேட்டு அழுத்தம் கொடுத்துள்ளார். ஆனால் முனியப்பன், தனக்குத் தெரியாது எனவும்,  அது என்னுடைய துறை சார்ந்த சம்பந்தப்பட்ட பைல் இல்லையென்று சொல்லியுள்ளார்.இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில் முனியப்பன் இல்லாத நிலையில் அவரது இருக்கையில் இருந்து ரம்யா ஒரு பைலை எடுக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த முனியப்பன் நீங்கள் செய்வது தவறு கண்டித்துள்ளார். அவருடைய இந்த விவகாரத்தை கவுன்சிலர் ரம்யா தனது கணவர் மரூர் ராஜாவிடம் சொல்கிறார்.

ந்த மரூர் ராஜா கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் 22 பேர் உயிர் பலிக்கு காரணமான முக்கிய குற்றவாளி, அந்த கள்ளச்சாராய விவகாரத்தில் 2 முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்ற முக்கிய நபர். இவரது மனைவியும், திண்டிவனம் 20வது வார்டு கவுன்சிலருமான ரம்யா இந்த தகவலைச் சொன்னதும், ரூர் ராஜா அடியாட்கள் பலருடன் சென்று முனியப்பனை கொலை மிரட்டல் விடுத்து அடிக்க முயன்றுள்ளார்.

S
முனியப்பனை காலில் விழ வைத்த போது

இந்த விவகாரத்தை ஆணையர் முதல் அதிகாரிகள் வரையும் முறையிட்டுள்ளார் முனியப்பன். ஆனால், அதிகாரிகளோ மெத்தனப்போக்கில் இருந்துள்ளனர். அன்றைய தினமே மாலை 4 மணிக்கு திண்டிவனம் நகரமன்ற தலைவரான நிர்மலாவின் கணவரும், கவுன்சிலர் ரவிச்சந்திரன் மற்றொரு கவுன்சிலர் பில்லா செல்வம், கவுன்சிலர் காமராஜ் மற்றும் நகரமன்றத்தை சார்ந்த அதிகாரிகள் ஒன்று சேர்ந்து, கவுன்சிலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முனியப்பனை மிரட்டி மன்னிப்புக் கேட்கக் கோரி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அப்போது இரு கைகளையும் கூப்பி மன்னிப்பு கேட்ட முணியப்பனை, அதற்கு மன்னிப்பு கேட்டால்  போதுமா காலில் விழுந்து கேளுடா என சாதியின் பெயரைச் சொல்லி மிரட்டியுள்ளனர். இதனையடுத்து முனியப்பன் காலில் விழுந்து கதறி அழுதுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தநிலையில் அழுது கொண்டே வெளியே வந்த முனியப்பன். தனக்குத் தெரிந்த கவுன்சிலர்கள் மற்றும் சில சமூக செயற்பாட்டாளர்களிடம் இந்த விவகாரத்தை தெரிவித்துள்ளார். இதனையடுத்து முனியப்பன், திண்டிவனம் டி.எஸ்.பியிடம், அளித்த புகாரின் அடிப்படையில் கவுன்சிலர் ரம்யா, அவரது கணவர் மரூர் ராஜா,  ரவிசந்திரன், காமராஜ், பிர்லா செல்வம் மற்றும் முனியப்பனை சாதி ரீதியாக மிரட்டிய அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.  தற்போது அந்த குற்றவாளிகள் அனைவரும் தலைமறைவாக இருந்து வருகிறார்கள்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செஞ்சி மஸ்தான், திண்டிவனம் நகரமன்ற தேர்தலில் திமுகவின் சட்டத் திட்டங்களை மதிக்காமல் தேர்தலுக்கு முன்பா ரிரு மாதங்களுக்கு முன்பே அதிமுக, பாமக உள்ளிட்ட பிற கட்சிகளைச் சார்ந்த நபர்களை 20 முதல் 25 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு, மூத்த கட்சி நிர்வாகிகளை கேட்காமல் கலந்து ஆலோசிக்காமல் கட்சி உறுப்பினர்களாகவே இல்லாத ரம்யா, சந்திரன், போன்ற கட்சி அடிப்படை உறுப்பினர் அடையாள அட்டை கூட இல்லாதவர்களுக்கு கட்சி சின்னத்தை வழங்கி போட்டியிட வைத்ததே இந்த மாதிரியான பிரச்னைக்கே முக்கிய காரணம் என திமுக நிர்வாகிகள் பேசிக் கொள்கிறார்கள்.

மேலும் கஞ்சா, கள்ளச்சாராயம், மணல் கடத்தல் போன்ற குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வரும் பலமுறை குண்டாஸ் சென்ற மரூர் ராஜா மற்றும் செஞ்சி மஸ்தானின் மருமகன்  ரிஸ்வான், கவுன்சிலர் சந்திரன் போன்ற நபர்களே செஞ்சி மஸ்தானின் அமைச்சர்  பதவியை திமுக தலைமை பறிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர்கள். இதே நிலை நீடித்தால், செஞ்சி மஸ்தானின் எம்.எல்.ஏ சீட்டும் வரும் தேர்தலில் கேள்விக் குறிதான் என்கிறார்கள். மேலும் திமுக தலைவர் வெளிநாடு  பயணம் முடிந்து சென்னை திரும்பினால் நிச்சயம் செஞ்சி மஸ்தானுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படும் வகையில் எதாவது நடைபெறும் என உடன் பிறப்புகள் முனுமுனுத்து வருகிறார்கள்.

admk genji masthan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe