பிரபல லாட்டரி அதிபரான மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டின், இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவரது முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சியின் (ஐஜேகே) இணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தவர் லீமா ரோஸ் மார்ட்டின். இவர் கடந்த சில மாதங்களாகவே கட்சி மீது தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தார். இந்த சூழ்நிலையில் கடந்த ஜனவரி மாதம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது லீமா ரோஸ், ஐஜேகேவில் இருந்து விலகி அதிமுகவில் இணையப்போகிறார் என்று தகவல் வெளியாகின. ஆனால் அதனை அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இதையடுத்து கடந்த 9ஆம் தேதி அவர், திடீரென ஐஜேகே கட்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர், கட்சி மீதுள்ள அதிருப்தியை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், அவர் இன்று (17-02-26) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவியான லீமா ரோஸ் மார்ட்டின், தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/17/leema-2026-02-17-18-31-24.jpg)