சமீபத்தில் தமிழ்நாடு ரைசிங் மாநாடு கோவையில் நடந்து முடிந்தது. இதனையடுத்து உணவுத் துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து தனது சோசியல் மீடியாவில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா.
அதில், " கோவையில் நடைபெற்ற #TNRising மாநாட்டிற்கு பிறகு, இரண்டாம் தலைமுறை தொழில்முனைவோர் ஒருவர் எங்களிடம் பேசினார். தமிழ்நாட்டில் நிறைய பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் மிகப்பெரிய இன்டஸ்ட்ரியாக உணவு தயாரிக்கும் துறை இருக்கிறது, இந்தத் துறையை மேலும் விரிவுபடுத்தத் தேவையான முதலீடு, துல்லியமான செயல்பாடு, சீரான கட்டமைப்பு ஆகியவை இன்னும் கூடுதலாகத் தேவைப்படும் நிலையில், பலரும் இந்த உணவுத்துறையை ஒரு முக்கியமான தொழிலாகவே பார்ப்பதில்லை என்று சொன்னார்.
இந்தப் பார்வை மாற வேண்டும் என்பதுதான் நம் விருப்பம். அதற்காக தொடர்ந்து உழைக்கிறோம். உணவுத் துறைக்கு தேவையான நிதி உதவி, திறமையான பணியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), உலகளாவிய அளவில் உணவுத் துறை விரிவாக்கம் ஆகியவை இப்போது தேவைப்படுவதையும், உணவுத்துறையை உண்மையான பொருளாதார வளர்ச்சிக்கான இயந்திரமாக உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதே மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் நோக்கம்.
தமிழ்நாட்டு மக்களால் அதிகம் விரும்பப்படும் உணவு நிறுவனங்களைக் கூட சிலர் ஏளனம் செய்வதையும் பார்க்க முடிகிறது. நம் மாநிலத்தில் உள்ள தொழில்முனைவோருக்கு இந்த ஏளனத்தை விடப் பெரிய அவமரியாதை இருக்க முடியாது.
இப்படிப்பட்ட துணிச்சலான முன்னோடி நடவடிக்கைகளுக்கு நம் #திராவிட_மாடல் அரசு ஆதரவளிப்பதைக் கண்டு நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்!
நம் சொந்த மண்ணில் உள்ள இந்த நிறுவனங்களைப் புறக்கணித்துவிட்டு, ஏன் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நம் கேள்வி. நம் சொந்த முதலீட்டாளர்களை நாம் கொண்டாட வேண்டாமா?
நம் மாநிலத்தில் உள்ள நிறுவனங்கள்தான் நமக்கு உணவளிக்கின்றன, வேலைவாய்ப்பைத் தருகின்றன, மேலும் தமிழ்நாட்டின் அடையாளத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்கின்றன. அவர்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி (Single-window facilitation) கிடைக்க வேண்டும், ஏற்றுமதி செய்வதற்கு ஆதரவு கிடைக்க வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக வெளிநாட்டு நிறுவனங்களைப் போல உள்நாட்டு வணிக நிறுவனங்களும் 'பெரிய கனவுகளைக் காண' தகுதியானவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நம் மாநில உணவு நிறுவனங்களை அவமானப்படுத்துவது என்பது அவர்களின் கடின உழைப்பை அவமதிப்பதாகும். அவர்களின் வளர்ச்சிக்குத் துணையாக இருப்பதே வலுவான தமிழ்நாட்டைக் கட்டமைக்கும். அதனால் நம் சொந்த மண்ணின் நிறுவனங்களை ஆதரிப்போம். ஒட்டுமொத்த உணவுத் துறைக்கும் உதவ நாங்கள் கூடுதலாக உழைப்போம்.
Follow Us