பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் பூத் கமிட்டி, நிர்வாகிகள் சந்திப்பு என இரண்டு நாள் பயணமாக புதுச்சேரி வந்துள்ளார். அவருடன் மத்திய தொழிலாளர் துறை அமைச்சரும் புதுச்சேரி பாஜக பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியாவும் புதுச்சேரி வந்திருந்தார். 

Advertisment

இந்த நிலையில் நிதின் நவீனை வரவேற்பதற்காக புதுச்சேரி கட்சி நிர்வாகிகளுடன் மன்சுக் மாண்டவியாவும் கோரிமேட்டில் காத்திருந்தார். அப்போது அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது நிதின் நபின் தன்னுடைய வாகனத்திலிருந்து ஊர்வலம் செல்ல திறந்த வெளி வாகனத்திற்கு சென்றார். அவரோடு உள்ளூர் தலைவர்களும் ஏறினர். ஆனால் உள்ளூர் மத்திய அமைச்சரான மன்சுக் மாண்டவியாவை அவர்கள் மறந்துவிட்டனர். இவர்கள் ஏறிய வாகனம் நகர்வலம் செல்ல அங்கே கூட்டம் குவிந்துள்ளது. 

Advertisment

இதனால் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் வாகனம் முன்னே வரமுடியவில்லை. இதனால் மன்சுக் மாண்டவியா கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் நடந்து சென்றுள்ளார். அவரோடு பாதுகாவலர்களும் அவரது உதவியாளர்களும் நடந்து சென்றனர். அப்போது அவர்களிடத்தில் என்னுடைய வாகனம் எங்கே என கடிந்து கொண்டார். மேலும் ஒரு மத்திய அமைச்சர் நடந்து செல்ல வேண்டுமா என கேட்ட பின்பு பாதுகாவலர்கள் வரும் வாகனத்தில் அவரை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.