Advertisment

“கூட்டணி ஆட்சியா?, ஒரு கட்சி ஆட்சியா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்” - மாணிக்கம் தாகூர் எம்.பி.!

manickam-tagore-mp-pm-1

கோப்புப்படம்

வருகின்ற சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மும்மரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் சூழலில், ஒவ்வொரு கட்சிகளும், தங்களது கட்சிக்குள் குழு ஒன்றை அமைத்து கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட தேர்தல் பிரச்சாரப் பணிகளில் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக காங்கிரஸில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த ஈடுபாடு காட்டியது. ஆனால், திமுகவில் கூட்டணி தொடர்பான குழு அமைக்கப்படாததால் காங்கிரஸ் சங்கடத்தில் இருந்து வந்தது. 

Advertisment

அதே சமயம், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் சமீபத்தில் தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 71 மாவட்டத் தலைவர்களை அழைத்து டெல்லியில் காங்கிரஸ் தலைமை நேற்று (10.02.2026) ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்ககட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், சட்டமன்றத் தேர்தலுக்காக கூட்டணி குறித்தும் காங்கிரஸ் கட்சியை எவ்வாறு வலுப்படுத்துவதும் குறித்தும் கருத்துக்கள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியானது.

Advertisment

இந்த கூட்டம் முடிந்த பிறகு செல்வப்பெருந்தகை மற்றும் தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களளைச் சந்தித்துப் பேசினர். அதில் செல்வப்பெருந்தகை, கூட்டணி தொடர்பாக திமுக இன்னும் குழு அமைக்காததால் காங்கிரஸ் தலைமை வருத்தமாக இருப்பதாகவும், இதனால் தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படுவதாகவும், எனவே திமுக உடனடியாக தேர்தல் பணிக் குழு அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் திமுக தொகுதி பங்கீட்டுக் குழு கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பேச்சுவார்த்தையை தொடங்கும் என திமுக தலைமைக்கழகம் அறிவித்தது. 

india-today-mks

மற்றொருபுறம் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக - காங்கிரஸ் கூட்டணி, மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பாகத் தனியார் ஆங்கில தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “திமுக -காங்கிரஸ் கூட்டணி இந்த தேர்தலில் நிச்சயம் இணக்கமாக இருக்கும். மற்றவர்கள் நினைப்பது மாதிரி இல்லை. ஊடகங்கள் அது போன்ற (திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் இருப்பது போன்று) ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இரு கட்சியினரும் நன்றாக இருக்கிறோம். ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்து வராது என்பது எங்களுக்கும் (திமுகவுக்கும்) தெரியும். அவர்களுக்கும் (காங்கிரஸுக்கும்) தெரியும். இது இடையில் உள்ள சிலர் கிளப்பிவிடும் பிரச்சனை. கூட்டணியில் ஏதாவது முறிவு ஏற்படுமா? என்று திட்டமிட்டு சதி செய்கின்றனர். அதனைப்பற்றி திமுகவும், காங்கிரஸும் கவலைப்படுவதில்லை” எனத் தெரிவித்திருந்தார்

இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார். இது கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் மாணிக்கம் தாகூர் மீண்டும் திமுகவை மறைமுகமாக சீண்டி வருகிறார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாணிக்கம் தாகூர்  எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா்? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை . 2006யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தவறு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Assembly Election 2026 Manickam Tagore Alliance Rahul gandhi congress dmk mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe