Advertisment

“அச்சம் இல்லை.... அச்சம் இல்லை” - மாணிக்கம் தாகூர் எம்.பி.!

manickam-tagore-mp-pm

கோப்புப்படம்

சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மும்முரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் சூழலில், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய சூழலில் தான் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் (15.02.2026) நடைபெற்றது. இதில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்து கொண்டார். 

Advertisment

இந்த கூட்டத்தில், “ஆட்சியில் பங்கு தர வேண்டும். அதிக எண்ணிக்கையிலான கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும். உள்ளாட்சியில் 30 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும்” எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான தீர்மானம் வாசிக்கப்படும் போது மாணிக்கம் தாகூர் செயற்குழு கூட்டத்தில் இல்லை. இந்த தீர்மானங்கள் வாசிக்கப்பட்ட பின்னரே மாணிக்கம் தாகூர் செயற்குழு கூட்டத்திற்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார். இது கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் மாணிக்கம் தாகூர் மீண்டும் திமுகவை மறைமுகமாக சீண்டி வருகிறார் எனக் கூறப்படுகிறது. 

Advertisment

அதே சமயம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் மற்றும் பாதயாத்திரை இன்று (17.02.2026) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் பங்கேற்க உள்ளார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை அவசர பயணமாக நேற்று (16.02.2026) மதியம் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த பயணத்தின் மூலம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் செல்வபெருந்தகையின் திடீர் டெல்லி பயணம் தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

atchamillai-atchamillai-manickam-tagore

இந்நிலையில் இது தொடர்பாக செல்வப்பெருந்தகை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர், “பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் மீது மாநில தலைவரான நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்களா?” என்ற கேள்விக்கு, “அது குறித்துப்  பேசத் தான் இன்றைக்கு அழைத்து இருக்கிறார்கள். இன்றைக்குப் பேசப் போகிறோம். ஆலோசனை செய்வோம். ஜனநாயகத்துக்கு முரணாக அகில இந்தியக் காங்கிரஸ் வழிகாட்டுதலுக்கு முரணாக யார் நடந்தாலும் தவறு தவறுதான்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மாணிக்கம் தாகூர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அச்சமில்லை.... அச்சமில்லை.... அச்சமென்ப தில்லையே” எனக் குறிப்பிட்டுள்ள பாரதியாரின் புகைப்படத்துடன் கூடிய படத்தை பகிர்ந்துள்ளார்..

Assembly Election 2026 congress Manickam Tagore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe