சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மும்முரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் சூழலில், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக - காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று (15.02.2026) நடைபெற்றது. இதில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில், “ஆட்சியில் பங்கு தர வேண்டும். அதிக எண்ணிக்கையிலான கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும். உள்ளாட்சியில் 30 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும்” எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான தீர்மானம் வாசிக்கப்படும் போது மாணிக்கம் தாகூர் செயற்குழு கூட்டத்தில் இல்லை. இந்த தீர்மானங்கள் வாசிக்கப்பட்ட பின்னரே மாணிக்கம் தாகூர் செயற்குழு கூட்டத்திற்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசுகையில், “என்னைப் பொறுத்தவரையில் என் கட்சி முக்கியம். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த வரையில் தன்மானம் தான் முக்கியம்.
நான் விருதுநகருக்கு எம்.பி. ஆகப் போகிறேன் என்றா வந்தேன்?. விருதுநகருக்கு எம்.பி. ஆக வேண்டும், என் தலைவர் ராகுல் காந்தி அனுப்பி வைத்ததால் நான் விருதுநகருக்கு வந்தேன். என்னைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சிதான் என்னுடைய உயிரே தவிர இந்த எம்.பி., எம்.எல்.ஏ., பதவி எல்லாம் வேண்டாம். அதனால் காங்கிரஸ் கட்சிதான் என்னுடைய உயிர். சாகும் வரை காங்கிரஸ்காரனாகத் தான் சாவேன். நம்முடைய போராட்டம் காங்கிரஸ்காரனுக்கு மரியாதைக்கான போராட்டம் ஆகும். நாங்கள் வேறு எதையும் கேட்கவில்லை. கமிஷன் கேட்கவில்லை. ரோடு கான்ட்ராக்ட் கேட்கவில்லை. நான் எம்.பி., ஆகி 13 வருடம் ஆச்சு. ஏதாவது ஒரு ஆளிடம், நான் கமிஷன் வாங்கினேன் என்று சொல்லட்டும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/15/mdu-congress-working-meeting-manickam-tagore-2026-02-15-13-18-57.jpg)
ரோடு கான்ட்ராக்ட்டுக்கு கமிஷன் கேட்டேன். மண் அள்ளுவதற்கு கமிஷன் கேட்டோம் என்பது எல்லாம் நம் பழக்கமே கிடையாது. நாங்கள் காமராஜருடைய வழி வந்தவர்கள். கக்கன் வழி வந்தவர்கள். எங்களைப் பொறுத்தமட்டில் நேர்மையாக இருந்து, சோறு இருந்தால் சாப்பிடப் போகிறோம். இல்லை என்றால் கஞ்சியை வைத்துச் சாப்பிட்டு விட்டு போயிகிட்டே இருப்போம். நாங்கள் பிரியாணி வேண்டும். அடுத்த வீட்டை அடித்துப் பறிக்க வேண்டும் என்ற பழக்கத்துக்கு எல்லாம் நாங்கள் போனதே கிடையாது.
அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாதவன் தான் காங்கிரஸ்காரன். முதலில் அதனைப் புரிந்துகொள்ள வேண்டும். நம்மை பொறுத்தமட்டில் மரியாதைக்காக இருப்பவர்கள். நம் தன்மானத்துக்காகவும், மரியாதைக்காகவும் தான் இருக்கிறோம். காங்கிரஸ்காரர்களைப் பற்றிப் பேசிய தளபதி போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத திமுக தலைமை, மீது மிக மிகப்பெரிய வருத்தத்தைத் தருகிறது” எனப் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/15/manickam-tagore-mp-mic-thalapathy-dmk-2026-02-15-13-17-49.jpg)