Advertisment

“தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்படுகிறது” - மாணிக்கம் தாகூர் எம்.பி. பரபரப்பு குற்றச்சாட்டு!

manickam-tagore-mp-ani-mic

பீகார் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 121 தொகுதிகளில் கடந்த 6ஆம் தேதியும் (06.11.2025), 122 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 11ஆம் தேதியும் (11.11.2025) நடைபெற்றன. இந்த தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (N.D.A.), காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி (இந்தியா கூட்டணி), தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. 

Advertisment

இத்தகைய சூழலில் தான் பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணும் பணி இன்று (14.11.2025) காலை 8 மணியளவில் தொடங்கியது. அந்த வகையில் 243 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி மதியம் 12.45 மணியளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 194 இடங்களிலும், இந்தியா கூட்டணி 44 இடங்களிலும், மற்றவை 5 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. முதன் முதலாக தேர்தலைச் சந்தித்த பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு இடங்களில் கூட முன்னிலை வகிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 122 தொகுதிகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisment

இந்நிலையில் பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையைக் கடந்த நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “பீகாரில் தேர்தலுக்கு முன்பு எஸ்.ஐ.ஆர். (S.I.R.) நடத்தப்பட்டது. இதில் 60 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதாவது மொத்த வாக்காளர்களில் 10% பேர் நீக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் எதிர்க்கட்சி வாக்காளர்கள். தேர்தலுக்கு முன்பே வாக்குச் சோரிக்கான (திருட்டுக்கான) மற்றொரு ஊடகமாக எஸ்.ஐ.ஆர்.  மாறிவிட்டது. பா.ஜ.க.வும் ஜே.டி.யுவும்  [JD(U)] எஸ்.ஐ.ஆரால் மட்டுமே வெற்றி பெற முடிகிறது. ஜனநாயகத்தைக் கொலை செய்ய எஸ்.ஐ.ஆர். ஒரு மிகப் பெரிய ஆயுதம். பீகாரில் எல்லோரும் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆனால் அது ஏன் தேர்தல்களில் தெரியவில்லை?. தேர்தல் ஆணையம் விற்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார். 

Assembly election Bihar congress Manickam Tagore RJD special intensive revision
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe