Advertisment

“ஜனநாயகன் படத்தை செங்கோட்டையன் விசிலடிச்சு பார்க்கப்போறாரு” - மாணிக்கம் தாகூர் பேட்டி!

manic

Manickam Tagore said 2026 will be the last election for AIADMK, T.V.K. will take its place

சிவகாசியில் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “2026 சட்டமன்றத் தேர்தல் அதிமுகவுக்கு கடைசி தேர்தலாகத்தான் இருக்கும். அந்தக் கட்சி இனிமேல் மேலே வர வாய்ப்பே இல்லை. தமிழகத்தில் பாஜகவோடு கூட்டணி வைத்த எல்லா கட்சிகளும் தோல்வி அடைந்ததுதான் வரலாறு. அதனால் பாஜகவோடு சேர யாரும் தயாராக இல்லை. இப்ப நிலைமை என்னன்னா, கூட்டணி வைக்க பாஜகவே கூவி கூவி அழைக்க வேண்டிய சூழல். விஜய் பாஜகவோடு கூட்டணி வைப்பார் என்ற பேச்சுக்கே இடமே இல்லை. அவர் அப்படி செய்யமாட்டார். தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தொடர்ந்து நான்கு தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இதுதான் உண்மை.

Advertisment

அதிமுகவை கபளீகரம் பண்ண பாஜக சதித்திட்டம் தீட்டியுள்ளது. அதிமுக இப்ப கடைசி தேர்தலை நோக்கிதான் போகுது. அந்தக் கட்சியின் கடைசி பொதுச் செயலாளரா எடப்பாடி பழனிசாமிதான் இருப்பார். அதிமுக என்ற கட்சியை  அமித்ஷா அதிமுகனு மாற்றிய பெருமை எடப்பாடி பழனிசாமியையே சேரும். 2026 தேர்தல் அதிமுகக்கு கடைசி தேர்தல். அதே நேரத்தில் தமிழக வெற்றிக்கழகம் அதிமுக இடத்தை நிரப்பும் கட்சியாக மாறிக்கிட்டிருக்கு. இந்த மாற்றம் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பயத்தை கொடுத்துட்டு இருக்கு. எம்ஜிஆர் உருவாக்கிய, ஜெயலலிதா நடத்திய அதிமுக, இப்ப டெல்லி கட்டுப்பாட்டுக்குள் போயிருச்சு. அதிமுகவிடம் இப்ப இரட்டை இலை சின்னமும், கட்சி அலுவலகமும் மட்டும் தான் இருக்கு. கட்சியை முழுக்க டெல்லி முதலாளிகளிடம் அடகு வச்சுட்டாங்க.

Advertisment

அதிமுக கட்சிக்கு இப்ப அமித் ஷாதான் முதலாளி. கட்சியை நடத்துறதும் அவர்தான். காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் எதிரி பாஜகதான். தமிழகத்துக்குள்ளே மதவாதம் வரக்கூடாது என்பதுதான் எங்களோட தெளிவான நிலைப்பாடு. வரப்போற சட்டமன்றத் தேர்தல் தமிழகத்துக்காக நடக்குற தேர்தல். அதே சமயம் மதவெறிக்கெதிரான தேர்தலும் இதுதான். எம்ஜிஆரின் படங்களை முதல் வரிசையில் உட்கார்ந்து பார்த்த செங்கோட்டையன், விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்தை விசில் அடிச்சு பார்க்கப்போறாரு.  வாழ்த்துக்கள்” என்றார்.  

Manickam Tagore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe