Manickam Tagoor responds to the news of his resignation at social media
சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து திமுகவுக்கு எரிச்சலூட்டும் வகையில் கருத்துகளைத் தெரிவித்து வருவது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புதிய சர்ச்சை ஒன்று பரவியது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றுவதற்கான முயற்சி தோல்வியடைந்ததால், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் என சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது. இந்தத் தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலளிக்கும் வகையில், மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த அல்றசில்ற ஐடிவிங் பாவம். நலம் பெற வாழ்த்துக்கள்”​என்று பதிவிட்டு அந்தத் தகவலை மறுத்தார். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு கருத்துகள் வெளிப்படையாக முன்வைக்கப்படுவது புதிதல்ல என்றும், ஆளுக்கொரு கருத்து கூறுவது அந்தக் கட்சியின் அரசியல் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது என்பதையும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Follow Us