Mani Shankar stirs up controversy; Congress executives upset Photograph: (political)
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணி சங்கர் நேற்று சில கருத்துக்களை தெரிவித்தார். இது, தேசிய அரசிலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . அதில், கேரளாவில் ஆளும் பினராயி விஜயன் அரசை பாராட்டி பேசியிருந்தார். மேலும், பினராயி அரசே ஆட்சியமைக்கும் என்று தெரிவித்திருந்தார். அதேபோல, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும் பெருமிதமாக பேசியிருந்தார். அடுத்ததாக, காங்கிரஸ் குறித்து விமர்சங்களை முன் வைத்திருந்தார். குறிப்பாக கேரளாவில், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளிடையே நிலவும் உட்கட்சி பூசல்கள் குறித்தும் வெளிப்படையாக பேசியிருந்தார். இந்த கருத்துக்கள், காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், இவரின் கருத்துக்களுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், மணிசங்கர் கூறுகையில், "கேரளாவில் மீண்டும் பினராயி விஜயன் ஆட்சி தான் அமையும். மேலும், நடப்பு ஆட்சி சிறப்பாக உள்ளது. குறிப்பாக, உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக செயல்படுகின்றன. எனவே, அவர் தான் மீண்டும் முதல்வராவார். மேலும், கேரளாவை சிறந்த உள்ளாட்சி அமைப்புகளை கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என்று அவரிடம் நான் கோரிக்கை வைக்கிறேன். அதே நேரத்தில், கேரளா மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டுள்ளனர். இது மக்களுக்கு தெரியாமல் இல்லை. இங்கு நடப்பது எல்லாமே மக்களுக்கு நன்றாக தெரியும்.
மேலும், இந்தியா கூட்டணி ஒருங்கிணைக்கப்பட்டால், அதற்கான சிறந்த ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என்று நான் நினைக்கின்றேன். இந்திய தொகுதியை ஒருங்கிணைப்பதற்கு தனது முழு நேரத்தையும் செலவு செய்வதற்கு யாரேனும் இருந்தால், ராகுல் காந்தி பிரதமராக முடியும். கடந்த ஓராண்டு காலமாக மு.க.ஸ்டாலின் செய்து வரும் அரசியல், நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு பொருத்தமான ஒன்றாகும். எனவே, இந்தியா கூட்டணியின் தலைவராக இருப்பதற்கு மு.க.ஸ்டாலின் சிறந்த நபராக இருப்பார். அதே நேரத்தில், அவர் ராகுல் காந்தி பிரதமராவதற்கு தடையாக இருக்க மாட்டார்" என்று தெரிவித்துள்ளார்.
இது காங்கிரசார் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பலரும் அவரது கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கே.சி.வேணுகோபால், "கேரளாவில் பினராயி அரசாங்கம் தொடரும் என்று மணிசங்கர் கூறியிருப்பது, அவருடைய தனிப்பட்ட கருத்து. அதற்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவர் தற்போது காங்கிரசில் இல்லை" என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா, "அவர் காங்கிரஸ் கட்சியில் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக அவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று கூறியுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியின் கேரளா சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த பார்வையாளர் சச்சின் பைலட், "அவர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் அல்ல. அது பற்றி கருத்து விருப்பம் இல்லை" என்று கூறியுள்ளார்.
Follow Us