மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து வரும் போர் பதற்றம் காரணமாக, 'ஹார்மோஸ்' நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதன் காரணமாக, வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வரத்து தடைப்பட்டுள்ளது. இதனால், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஒரு வார காலமாக நடைபெற்று வரும் போர் பதற்றத்தால், இந்தியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளில், எரிசக்தி குறித்தான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. ஏற்கனவே, வங்கதேசத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் பர்னாலாவின் தனௌலாவில், குருநானக் எரிபொருள் நிலையத்தில் (பெட்ரோல் பங்க்) உரிமையாளர் டெக்வீர் சிங், ஒரே நாளில் சுமார் ₹13 லட்சம் மதிப்புள்ள எரிபொருளை விற்பனை செய்துள்ளதாகக் கூறினார். இது வழக்கமாக நடைபெறும் ₹4-5 லட்சத்தை விட மூன்று மடங்கு அதிகமான விற்பனையாகும். இந்த திடீர் விற்பனை அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரணம், அம்மாநிலத்தில் தற்போது கோதுமை அறுவடை முடிவுற்று அடுத்தகட்ட பயிரிடும் வேலைகள் அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடங்கும். எனவே, தொடர்ந்து வரும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் கிடைக்காமல் போனால் தங்களால் விவசாய சாதனங்களைப் பயன்படுத்த முடியாது. இதனால், விவசாயம் செய்வதில் சிக்கல் ஏற்படும். அதனால், ஒரு விவசாயி டிராக்டரில் சில பேரல்களைக் கொண்டு வந்து, அதில் டீசலை வாங்கி சென்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இது பின்வரும் நாளில் எரிபொருள் தட்டுப்பாடு நிச்சயம் ஏற்படுமோ என்ற அச்சத்தை அப்பகுதி மக்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.
இந்த சம்பவம், பதிண்டா, சங்ரூர் மற்றும் பர்னாலா உள்ளிட்ட பல்வேறு மால்வா மாவட்டங்களின் கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளிடமும், இது போன்ற எரிபொருள் பற்றாக்குறை சார்ந்த பீதி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எரிபொருள் வாங்க முற்படும் சம்பவங்களும் நிகழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பதிண்டா துணை ஆணையர் ராஜேஷ் திமான் கூறுகையில், "பதிண்டா மொத்த எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோக வர்த்தகத்தின் மையமாகும், எரிபொருள் சார்ந்து எந்த பற்றாக்குறையும் இங்கு ஏற்படவில்லை. கிராமப்புறங்களில் ஒரு சில இடங்களில் நடைபெறும் இது போன்ற சம்பவங்களைத் தவிர, எரிபொருள் வாங்குவதில் திடீர் அதிகரிப்பு எதுவும் இல்லை. நிலைமை கட்டுப்பாட்டில் தான் உள்ளது" என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/07/1034-2026-03-07-11-14-16.jpg)