சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பெட்டிக்கடையில் 24 மணிநேரமும் கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்து மது கூடம் நடத்துவதாகவும், டாஸ்மாக் கடை விடுமுறை நாட்களில் இந்த பெட்டிக்கடையில் கூட்டம் வழிந்தோடுகிறது என சிதம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் அம்பேத்கருக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர்.

Advertisment

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெட்டிக் கடையின் பின்புறம் ரகசியமாக அரசின் மதுபான பாட்டில்கள் மற்றும் மதுக்கூடம் அமைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள், காலி மதுப்பாட்டில்கள் என அனைத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட பெட்டிக்கடை உரிமையாளர் சிதம்பரம் எடத்தெருவைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் செல்வம் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கடந்த காலங்களில் இதுபோன்ற தகவல்களை காவல்துறையினருக்கு தகவல் அளித்தாலும் மேலோட்டமாக பார்த்துவிட்டு சரியான நடவடிக்கை எடுக்காததால் பல ஆண்டுகளாக இதுபோன்ற நடைபெற்று வருவதாகவும். சிதம்பரம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட ஆறு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பிறகு தற்போது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.