ஈரோடு வைராபாலையம் பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. மாணவியிடம் திருமண ஆசை கூறி வாலிபர் நெருங்கி பழகி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.

Advertisment

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் 10 ம் வகுப்பு பயிலும் 14 வயது மாணவிக்கு திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

அதன்பிறகு அந்த வாலிபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் நீதிபதிகளின் உத்தரவின் பேரில் சிறையில அடைத்தனர்.

ஈரோட்டில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை இளைஞர் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.