பாண்டிச்சேரியை சேர்ந்த திருநங்கை ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 28). இவரை கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அத்தியாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் காதல் திருமணம் செய்து ஒன்றாக அத்தியா நல்லூர் கிராமத்தில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இதனையடுத்து திருநங்கை ரம்யாவிடம் சத்தியமூர்த்தி ரூ. 4 லட்சம் வரை பணம் பெற்றுள்ளதாகவும் தற்போது திருநங்கையை பதிவு திருமணம் செய்து கொள்ள சத்தியமூர்த்தி மறுத்து வருவதாக திருநங்கை ரம்யா புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சத்தியமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.