Advertisment

“மேற்கு வங்காளத்தை உடைக்க பார்க்கிறீர்களா?” - மத்திய அரசை மம்தா பானர்ஜி கடும் தாக்கு

mamatabane

Mamata Banerjee hits out at the central government

விரைவில் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், “சமையல் எரிவாயு விலை மற்றும் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்ஐஆர்) வாக்காளர் பட்டியல் மூலமாக மத்திய அரசு மேற்கு  வங்கத்தைப் உடைக்க பார்க்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisment

மேலும், பேசிய அவர், “மீண்டும் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. அது போக, 21 நாட்களுக்கு முன்பாகவே சிலிண்டர் முன் பதிவு செய்ய வேண்டும் எனக் கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், இடையில் சிலிண்டர் தீர்ந்து போனால், நீங்கள் (மத்திய அரசு) வீட்டிற்கு நேரடியாக வந்து உணவு டெலிவரி செய்வீர்களா? அது மட்டுமல்லாமல், மண்ணெண்ணெய் ஒதுக்கீடும் குறைக்கப்பட்டுள்ளது. நீங்கள்  (மத்திய அரசு) ஒவ்வொரு நாளும் பொருட்களின் விலையை உயர்த்துகிறீர்கள். இதற்குப் பின்னால் இருக்கும் உள் நோக்கம் என்ன?

Advertisment

மத்திய அரசு மேற்குவங்க மாநிலத்தை அரசியல் ரீதியாகக் குறி வைத்துத் தாக்குகிறது. எங்கள் மக்களுக்கு, இது போன்ற சிக்கலை ஏற்படுத்துவதற்குத் தான், தேர்தலில் எங்கள் வாக்குகளை நீங்கள் விரும்புகிறீர்களா? மேற்கு வங்காளத்தை உடைக்க விரும்புகிறீர்களா? மற்றவர்கள் உங்களைப் பார்த்து அச்சம் கொள்ளலாம். ஆனால், நாங்கள் அச்சம் கொள்ள மாட்டோம். உங்கள் முகமூடிகளைக் கிழித்தெறிவோம். சிலிண்டர் விலை உயர்வு. மண்ணெண்ணெய் பற்றாக்குறை மற்றும் எஸ்ஐஆர் செயல்பாட்டில் பெண்களின் பெயர் நீக்கம் ஆகியவற்றிற்கு எதிராக நாளை போராட்டம் நடத்தப்படும். முதலில் நீங்கள் எப்ஸ்டீன் பிரச்சனையைப் பாருங்கள், பிறகு வங்காளத்தைப் பார்க்கலாம்” என்று தெரிவித்தார்.

west bengal Mamata Banerjee
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe