சில ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் பெரிய அளவிலான பண மோசடி வழக்குகளில் சிக்கி சிலர் நாட்டை விட்டு தப்பி வெளிநாடுகளுக்கு சென்று விட்டார். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி ஆகியோர் ஆகும். விஜய் மல்லையா "கிங்பிஷர்" என்ற பெயரில் விமான சேவை நிறுவனம் மற்றும் மதுபான நிறுவனம் நடத்தி வந்த இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார். இந்த நிறுவனங்கள் மீது பல வங்கிகளில் கடன் வாங்கி இருந்த நிலையில் மல்லையா அந்தக் கடனை திருப்பி செலுத்தாமல் 2016-ம் ஆண்டு வெளிநாட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் அவரை இந்த நாட்டிற்கு அழைத்து வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டிருந்தது. தற்போது மல்லையா லண்டனில் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதேபோன்று பண மோசடிக் காரணமாக, 2010-ம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறி வேறு நாட்டிற்கு தப்பி சென்றவர் நீரவ் மோடி. இந்தியாவில் மிக அதிக அளவு மக்களால் வரவேற்கப்படும் விளையாட்டு கிரிக்கெட் ஆகும். மக்களிடையே இருக்கும் பெரும் வரவேற்பின் காரணமாக கொண்டுவரப்பட்டது தான் ஐ.பி.எல். இந்த ஐபிஎல் தொடரின் முன்னாள் தலைவராக இருந்தவர் தான் நீரவ் மோடி. தலைவராக இருந்த சமயத்தில் பண மோசடி மற்றும் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக இவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார்.  

Advertisment

இந்தநிலையில், தற்போது லண்டனில் பெல்கிரேவ் பகுதியில் வாழ்ந்து வரும் மோடி, தனது நண்பரான மல்லையாவின் 70 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், அவரது வீட்டில் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில் மல்லையா கலந்து கொண்டதை வீடியோவாக பதிவிட்ட மோடி, வீடியோவில் "இந்தியாவில் மீண்டும் இணையத்தை அதிர வைப்போம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் நண்பரே விஜய்மல்லையா. உங்களை நேசிக்கிறேன்" என்ற தலைப்புடன் பகிர்ந்து, தனது அன்பை வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும் அந்த வீடியோவில், "நாங்கள் இருவரும் இந்தியாவிலிருந்து தப்பி ஓடியவர்கள்"  என்று கூறினார். இதைக் கேட்டு விஜய் மல்லையா சிரித்துக் கொண்டிருந்தார். மேலும் பேசுகையில் "நான் யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், குறிப்பாக இந்திய அரசாங்கத்திடம், அவர்கள் மீது நான் மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருக்கிறேன்" என்று நீரவ் மோடி கூறினார்.

Advertisment

இந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது "இந்திய அரசை வெளிப்படையாக கேலி செய்வதாக உள்ளது. பொருளாதார குற்றவாளிகள் வெளிநாட்டில் சுதந்திரமாக இருந்து கொண்டு, இந்தியாவை கேலி செய்வதை பார்க்கும் போது அரசு மற்றும் அமலாக்கத்துறை எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இந்த சம்பவத்தில், அரசாங்கத்தின் மௌனம் ஒரு ஆபத்தான போக்காகும். அதாவது சக்தி வாய்ந்த ஒரு நாட்டை ஏமாற்றிவிட்டு, தப்பி ஓடி சுதந்திரமாக வாழலாம்" என்ற செய்தியை உணர்த்துவதாக ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.

நீரவ் மோடியின் இந்த பதிவிற்கு, வெளியுறவு அமைச்சகம் கடும் ஆட்சேபனை தெரிவித்ததுடன், அவர்களை இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது. அவர்களை திரும்ப கொண்டு வரும் நோக்கில் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேசிவருவதாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.