Advertisment

“மத்திய பட்ஜெட் உரையா? தமிழ்நாடு பட்ஜெட் உரையா?” - நிர்மலா சீதாராமனுக்கு கார்கே கண்டனம்

nirmalakhar

mallikarjun Kharge slams Nirmala Sitharaman in rajya sabha

நாடாளுமன்றத்தில் 2026-2027 நிதியாண்டிற்கான தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தொடர்பான விவாதம் இரு அவைகளிலும் கடந்த சில தினங்களாக காரசாரமாக நடைபெற்று வருகிறது. இந்த விவாததின் போது எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெறும் நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் 4.56 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்திருப்பதாக பேசியிருந்தார்.

Advertisment

மாநிலங்களவையில் இது தொடர்பாக பேசிய அவர், “கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத தமிழ்நாட்டில் தற்போது கடன் உள்ளது. திமுக ஆட்சியில் 4.56 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது” என்று குற்றம்சாட்டினார்.

Advertisment

அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுந்து நின்று, “தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இங்கே இப்படி பேசுவது நியாமல்ல. இது மத்திய பட்ஜெட் உரையா? அல்லது தமிழ்நாடு பட்ஜெட் உரையா?” என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். 

Nirmala Sitharaman Mallikarjun Kharge
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe