மதிமுகவிலிருந்து மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்கம் செய்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Advertisment

மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா  மீது கட்சிக்கு எதிராக விரோத செயல்களில் ஈடுபடுவதாக ஏற்கனவே தற்காலிக ஒழுங்கு நடவடிக்கையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எடுத்திருந்தார். மல்லை சத்யாவிடம்  விளக்கம் கேட்டு 15 நாட்களுக்குள் பதில் அனுப்ப வேண்டும் என கேட்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான விளக்கத்தையும் கடந்த வாரம் மல்லை சத்யா மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அனுப்பி இருந்தார்.

இந்நிலையில் கட்சியில் இருந்து மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்குவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கையில், 'மதிமுகவின் பொறுப்பில் இருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் தங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட திட்டங்கள் விதி-19, பிரிவு-5 விதி-19, பிரிவு- 12, விதி-35, பிரிவு-14, விதி-35 பிரிவு-15ன் படி துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கழகத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கி அறிவிக்கிறேன்' என வைகோ தெரிவித்துள்ளார்.