சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அண்ணாமலை நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். 

Advertisment

அப்போது, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் மொட்டையடிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்தது. அதனைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்கு வந்தவர் தவறி வாய்க்காலில் விழுந்தாரா? அல்லது யாராவது அழைத்து வந்து கொலை செய்து வாய்க்காலில் வீசியுள்ளார்களா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.