Advertisment

ராமஜெயம் வழக்கில் முக்கிய திருப்பம்.. DIG வருண் அதிரடி!

Varun

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் திருவளர்சோலையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்தக் கொலை சம்பவம் நடந்து 13 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் தற்போது வரை கொலை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை; கொலைக்காண காரணமும் வெளிவரவில்லை. இந்த கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. வரை விசாரித்தும் கொலையாளிகளைப் பிடிக்க முடியாமல் விசாரணை நீண்டு வருகிறது. 

Advertisment

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்ந்து பல மர்மங்கள் நீடித்து வரும் நிலையில், கடந்த மார்ச் மாதம் திருச்சி டிஐஜி வருண்குமார் சிறப்பு புலனாய்வு குழுவிற்கு தலைமை ஏற்று ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க தொடங்கினார். உறங்கிக் கொண்டிருந்த ராமஜெயம் வழக்கை மீண்டும் தூசு தட்ட ஆரம்பித்தார் சிபிசிஐடி டி.ஐ.ஜி வருண்குமார். தஞ்சாவூர் எஸ்.பி ராஜாராமும் முக்கிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதிரடி விசாரணைக்கு பெயர் பெற்ற வருண்குமார், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, புழல் சிறையில் உள்ள மண்ணச்சநல்லூர் குணசீலன் என்பவரிடம் விசாரணை நடத்தினார். ராமஜெயம் கொலை வழக்கில், நீண்ட நாட்களாக விடை கிடைக்காத நிலையில், வேறொரு கொலை வழக்கில் தண்டனை பெற்று பாளையங்கோட்டையில் சிறைவாசியாக உள்ள சுடலையிடம் விசாரணை முடித்த கையோடு, சென்னை புழல் சிறைக்கு டிஐஜி வருண்குமார் தலைமையிலான போலீசார் வந்து விசாரணை செய்தது பரபரப்பானது. 

Advertisment

12345

இப்படிப் பல கோணங்களை அடிப்படையாகக் கொண்டே டிஐஜி வருண்குமார் விசாரித்துள்ளார். இதில், தற்போது இந்த வழக்கு முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. கக்கூஸ் கணேசன், எடுபுடி செந்தில் என்கின்ற மீன்கார தினேஷ் மற்றும் ராசாத்தி செந்தில் உள்ளிட்டோரிடம் தற்போது, கிடுக்குப் பிடி விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், மீன் தினேஷ் மற்றும் கக்கூஸ் கணேசன் இருவரும் திண்டுக்கலைச் சேர்ந்தவர்கள் என்பதும் ராசாத்தி செந்தில் சிவகங்கையை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர்கள் சில முக்கியத் தகவல்களை சொல்லியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் வழக்கில் தொடர்புடைய நபர்கள் பீதியில் உறைந்துள்ளனர். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருக்கும் இந்த வழக்கை முடிப்பதற்கான இறுதிக்கட்டத்தை வருண்குமார் நெருங்கியுள்ளார் என காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

ips varunkumaar K.N.Nehru ramajayam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe