சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல ரவுடி மயிலாப்பூர் சிவகுமார் கொலை வழக்கில் முக்கிய நபராக உள்ள ரவுடி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான்.

Advertisment

பிரபல ரவுடி மயிலாப்பூர் சிவகுமார் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி அழகு ராஜாவை கடந்த 2025 ஜனவரி மாதம் பிடிக்க முயன்றபோது திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் அருகே திருப்பதி-சென்னை நெடுஞ்சாலையில் காரில் ஒரு உதவி ஆய்வாளரை தூக்கி பிடித்தபடியே அழகுராஜா சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகி இருந்தது.  

Advertisment

ஜாம்பஜார் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக உள்ள ஆனந்தகுமார் ரவுடி அழகுராஜா தப்பிச் சென்றபோது இருசக்கர வாகனத்தில் துரத்தியுள்ளார். அப்போது ஆனந்தகுமாரை காரில் இருந்து பிடித்து இழுத்துக்கொண்டு நிறுத்தாமல் அழகுராஜா வேகமாக சென்றிருக்கிறான். இதில் காயமடைந்த ஆனந்தகுமார் காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

தொடர்ந்து ரவுடி அழகுராஜாவை பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடிவந்த நிலையில் தான் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது மாவட்ட நீதிபதி முன்னிலையில் சரணடைந்துள்ளான். சென்னையில் ஏ பிளஸ் ரவுடியாக அழகுராஜா இருக்கிறான். இவர் மறைந்த அதிமுக பிரமுகரான தோட்டம் சேகரின் மகன் ஆவார். தனது தந்தை தோட்டம் சேகரின் கொலைக்காக பழிவாங்க பிரபல ரவுடி மயிலை சிவகுமாரை கொலை செய்தில் முக்கிய நபராக அழகுராஜா கருதப்பட்டான். அழகுராஜா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது உயர்நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறான்.

Advertisment