Advertisment

“மாபெரும் காதுகுத்தும் விழா” - சட்டப்பேரவைக்கு அழைப்பிதழுடன் வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

ear-function-admk-mla

2026 - 2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (17.02.2026) காலை 09:30 மணிக்கு கூடியது. அப்போது சபாநாயகர் அப்பாவு, “ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கும் நெறி” என்ற திருக்குறளை வாசித்தார். அதற்கான பொருளாக, “வருவாய் அளவை அறிந்து அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராக காத்து வாழும் வழியாகும்” எனத் தெரிவித்தார். 

Advertisment

அதனைத் தொடர்ந்து இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார். தொடக்கத்தில், “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி உரையாற்றினார். முன்னதாக  சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கலையொட்டி ‘காது குத்தும் விழா’ என்ற அழைப்பிதழுடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை வந்திருந்தனர். அப்போது இடைக்கால பட்ஜெட் என்னும் பெயரில் தமிழக மக்களுக்கு திமுக அரசால் காது குத்தும் விழா நடைபெறுவதாக அவர்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர். 

Advertisment

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்திருந்த காது குத்தும் விழா அழைப்பிதழில், “மாபெரும் காதுகுத்தும் விழா. கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. நாள்: பிப்ரவரி 17, 2026. இடம்: தமிழக சட்டமன்றம். நேரம்: காலை 10 மணி முதல். இவ்விழாவிற்கு தலைமை தாங்குபவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முன்னின்று காது குத்துவார்

ear-function-admk

மேற்படி விழாவில் கூவம் சுத்திகரிப்பிற்கு நிதி, சென்னை மழைநீர் வடிகால் திட்டத்திற்கு நிதி, சிங்காரச் சென்னை திட்டத்திற்கு நிதி என்று விதவிதமாக காது குத்தப்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம். பின் குறிப்பு: சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என பல்வேறு முறைகளில் 'மொய்' வைக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அழைப்பிதழ் அதிமுகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வைரலாக்கி வருகின்றனர். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இடைக்கால வேளான் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. 

admk ADMK MLAs budget session mk stalin Thangam Thennarasu tn assembly
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe