ஆஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் இந்திய சமுதாயக்கூடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சமுதாயக்கூடத்தில் இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையானது பல ஆண்டுகளாக இங்கு இருந்து வந்த நிலையில், நேற்று (02-02-26) இரவு மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. இந்த சிலையானது வெண்கலத்தால் செய்யப்பட்டது எனவும், அதன் எடை 420 கிலோ வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மர்ம நபர்களால் காந்தியின் சிலை திருடப்பட்டுள்ளதையடுத்து, இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்த சம்பவத்தில், திருடர்கள்  சிலையின் இரண்டு பாதங்களைத்  தவிர்த்து, மீதமுள்ள உடல் பாகத்தை திருடி சென்றுள்ளனர். மேலும், அந்த சிலையை அவர்கள் துண்டு துண்டாக வெட்டி திருடிச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சிலை ஏன் திருடப்பட்டது? இந்த சம்பவத்தில் திருட்டையும் தாண்டி, குறிப்பிடத்தக்க வகையிலான வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக மெல்போன் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக அப்பகுதியில் உள்ள 17க்கும் அதிகமான  சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டு வருகின்றன. மேலும், இந்த சம்பவம் குறித்து இந்தியத் தூதரகத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், இந்த சம்பவத்தின் மீது துரிதமாக  விசாரணை மேற்கொள்ள ஆஸ்திரேலிய தூதரகம் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.