Advertisment

காணொளி மூலமாக விவாகரத்து; மகாராஷ்டிரா மாநில நீதிமன்றம் உத்தரவு!

maharashtracourt

Maharashtra state court orders Divorce through video

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்த தம்பதி குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர். அதாவது, 31 வயது கணவர்  மற்றும்  24  வயது மனைவி ஆகிய இந்த தம்பதிக்குக் கடந்த 2022 ம் ஆண்டு தானே பகுதியில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த ஆரம்பக் காலங்களில் இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்து வந்தது. பிற்காலத்தில் அவர்களுக்குள் கருத்து முரண்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது.  

Advertisment

இதன் காரணமாகக் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 தேதி இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருமே கனடா நாட்டில் வேலை பார்த்து வந்த போதிலும், வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். கணவன் மற்றும் மனைவி இருவருமே வெளிநாடுகளில் வேலை பார்த்து வரும் நிலையில், காணொளி வாயிலாக இந்த விவாகரத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் இருவரும் மனம் ஒத்துப் பிரிவதாகத் தெரிவித்ததையடுத்து, அவர்களுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஆர்.எஸ் பகரே இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

Advertisment

இந்த தீர்ப்பில், ‘பயிற்சி பெற்ற ஆலோசகர் இந்த தம்பதியினரிடம், பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இருந்தபோதிலும் தம்பதிகள் சேர்ந்து வாழ்வதில் விருப்பம் காட்டவில்லை. அவர்கள் பிரிந்து வாழ்வதில் உறுதியாக உள்ளனர். அதே நேரத்தில், பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம், நிகழ்கால மற்றும் எதிர்கால பிரச்சனைகள் குறித்தும் இருதரப்பிலும் மனம் ஒத்துத் தீர்வு காணப்பட்டுள்ளது. எனவே, இவர்களுக்கிடையிலான பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

divorce Maharashtra
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe