மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு சிறுபான்மையினருக்கான ஐந்து சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்தது. அதாவது, சிறப்பு பிற்படுத்தப்பட்ட பிரிவின் (எஸ்பிசி-ஏ) கீழ் இஸ்லாமியர்களுக்காக இந்த 5% இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இது கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்குப் பொருந்தும். இந்த சட்டம் தேர்தல் நேரத்தில், ஒரு அவசரக் கால சட்டமாகக் கொண்டு வரப்பட்டது. இதனை எதிர்த்து மும்பை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த அவசரச் சட்டத்திற்கு நவம்பர் 14, 2024 அன்று இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த சட்டம் விதிக்கப்பட்ட 23 டிசம்பர் 2024 காலக்கெடுவிற்குள் சட்டமாக மாற்றப்படவில்லை. இதனால், இந்த சட்டம் காலவாதியாகிய நிலையில், அமலுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து, பாஜக கூட்டணி ஆட்சியில் இந்த சட்டம் குறித்த அறிவிப்பில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில், தற்போதைய பா.ஜ.க - அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் - ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா அடங்கிய மகாயுதி கூட்டணி அரசு, இந்த இஸ்லாமியர்களுக்கான 5% இட ஒதுக்கீடு சம்பந்தமான அனைத்து அரசு தீர்மானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் எம்.பி. வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளதாவது, ‘கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற்றம் அடைவதற்கான வழிவகை செய்ய அறிவிக்கப்பட்ட 5% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல், அரசு இந்த சட்டத்தை ரத்து செய்திருப்பது கண்டிக்கதக்கது. மேலும், இது இஸ்லாமியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/18/mahayuti-2026-02-18-18-40-24.jpg)