விவசாயிகள் தற்கொலை செய்வதற்குப் பதிலாக சட்டமன்ற உறுப்பினர்களைத் தாக்குவது உட்பட தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மகாராஷ்டிராவின் பிரஹார் ஜனசக்தி கட்சித் தலைவரான பச்சு காடு என்பவர், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை அம்மாநில அமைச்சராகப் பதவி வகித்து வந்துள்ளார். 

Advertisment

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் பச்சு காடு, புல்தானா மாவட்டத்தின் பதுர்டா கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது விவசாயிகளை நோக்கி பேசிய பச்சு காடு, “பருத்திக்கு ரூ.3,000 விலை கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் தற்கொலை செய்து கொள்வீர்கள் என்று சொல்வீர்கள். ஏய், தற்கொலை செய்வதற்குப் பதிலாக ஒரு ஒருவரை கொல்லுங்கள், சட்டமன்ற உறுப்பினரை வெட்டுங்கள்.

அதன் பின்னர், தற்கொலை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. தற்கொலை செய்து கொள்வதற்குப் பதிலாக, ஒரு சட்டமன்ற உறுப்பினரின் வீட்டிற்குச் சென்று உங்கள் உடைகள் அனைத்தையும் கழற்றிவிட்டு அங்கே உட்கார்ந்து வீட்டின் முன் சிறுநீர் கழியுங்கள். இது இறப்பதை விட நல்லது” என்று கூறினார். இவருடைய பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment