காவல் துணை ஆய்வாளரால் ஐந்து மாதங்களில் 4 முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தனது கையில் எழுதி வைத்துவிட்டு பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

மகாராஷ்டிரா  மாநிலம், சதாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் ஒருவர், ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண், தனது இடது உள்ளங்கையில் ஒரு தற்கொலை குறிப்பை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

அதில், ‘நான் இறந்ததற்கு எஸ்.ஐ கோபால் பட்னே தான் காரணம். அவர் என்னை நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்தார். ஐந்து மாதங்களுக்கும் மேலாக அவர் என்னை பாலியல் வன்கொமையும், மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார். அவரது தொடர்ச்சியான துன்புறுத்தல் என்னை தற்கொலை செய்ய கட்டாயப்படுத்தியது’ என அந்த பெண் குறிப்பிட்டிருந்தார். அதே நேரத்தில், காவல் அதிகாரி பிரசாந்த் பங்கர் தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாகப் பெண் மருத்துவர் தனது தற்கொலை குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ், அங்கு விரைந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் பெண் மருத்துவரின் கையில் எழுதப்பட்ட தற்கொலை குறிப்பை தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், காவல் துணை ஆய்வாளர் கோபால் பட்னே இடைநீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisment