மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார், பாராமதி என்ற இடத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகச் சிறிய ரக தனி விமானத்தில் பயணத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் பயணித்த விமானம் பாராமதியில் தரையிறங்க முயன்றுள்ளது.
அச்சமயத்தில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. பாராமதி என்ற இடத்திற்கு அதே சமயம் இந்த தீ பற்றி எரிவது தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன. அஜித் பவார் பயணித்த விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அஜித் பவார் பயணித்த விமானம் புனே மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதாவது மும்பையிலிருந்து பாராமதிக்குச் சென்ற விமானம் காலை 8.45 மணிக்கு மகாராஷ்டிராவின் பாராமதியில் தரையிறங்கிய போது விபத்தில் சிக்கியது. துணை முதல்வர் அஜித் பவார் விமானத்தில் இருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித் பவார் விமான விபத்தில் மரணம் அடைந்ததாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Follow Us