இந்திய கிரிக்கெட் புரட்சி நாயகன் மற்றும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இன்று மதுரையில் அமைந்துள்ள வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு. எம்.வி.எம். முத்துராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
உலகத் தரத்துக்கு இணையாக அமைக்கப்பட்ட இந்த மைதானம், இளம் விளையாட்டாளர்களுக்கான திறன் வள மேம்பாட்டுக்கு புதிய ஒளியாகத் திகழ்கிறது. இதில் சர்வதேச தர பீட்ச், இரவைப் பகலாக்கும் விளக்குகள், பகல் இரவு ஆட்டங்களுக்கான , ஆட்டக்காரர்களுக்கான நவீன அறைகள், டிஜிட்டல் ஸ்கோர் போர்டு, பயிற்சி வலைகள், உடற்பயிற்சி கூடம், மீடியா மற்றும் வி.ஐ.பி. கேலரிகள், மேலும் பெரிய அளவிலான பார்வையாளர் இருக்கைகள் ஆகிய வசதிகள் உள்ளன.மழை பெய்தாலும் அடுத்த 10 நிமிடங்களில் மைதானம் விளையாடுவதற்கு தகுந்தாற் போல காய்ந்து விடும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் இந்த மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/09/a5472-2025-10-09-23-13-14.jpg)
நிகழ்வில் பேசிய தோனி, “இப்படிப்பட்ட உலகத் தரம் வாய்ந்த வசதிகளைக் கொண்ட வேலம்மாள் கிரிக்கெட் மைதானம் , எதிர்கால கிரிக்கெட் வீரர்களின் கனவுத் தளமாக விளங்கப் போகிறது'' என தெரிவித்தார்.
தலைவர் எம்.வி.எம். முத்துராமலிங்கம் பேசுகையில், “இந்த மைதானம் தோனி போன்ற உலக கிரிக்கெட் ஜாம்பவான் திறந்து வைப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. திறமைக்கு தளம் அமைத்துத்தரும் எங்கள் நோக்கை இது இன்னும் உயர்த்துகிறது'' என்றார்.
“Making Champions” என்ற நோக்கத்தில் செயல்படும் வேலம்மாள் நிறுவனம், இன்று விளையாட்டு உலகிலும் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.