ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா சுங்கச்சாவடி அருகே, வேலூரிலிருந்து சென்னை நோக்கி அதிவேகமாகச் சென்ற கியா சொகுசு கார், சுமார் 1 கிமீ தூரம் தேசிய நெடுஞ்சாலையில் முன்பகுதியில் சிக்கிய விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தைத் தரதரவென இழுத்துச் சென்றதால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகினர்.
அந்தக் கார் வாலாஜா சுங்கச்சாவடியில் கூட நிற்காமல், தொடர்ந்து இருசக்கர வாகனத்தைத் தரதரவென இழுத்துச் சென்றது. வாலாஜா சுங்கச்சாவடிக்கு 500 மீட்டர் முன்பாக, கட்டுப்பாட்டை இழந்த கார், சுங்கச்சாவடி நோக்கி வந்த மூன்று இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் 6 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.