உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் உம்ரி சப்ஜிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது அர்மான் (27). இவர் சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்குத் திரும்பி வந்துள்ளார். இவர் மீண்டும் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்த சமயத்தில் அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த காஜல் சைனி என்ற இளம்பெண்ணுக்கு இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெண்ணின் குடும்பத்தினருக்குத் தெரிய வந்த நிலையில், இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் இந்த காதலுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக காஜலின் சகோதரர்கள் இதனைக் கடுமையாக எதிர்த்ததுடன், அர்மானை சந்திக்கக் கூடாது எனவும் எச்சரித்துள்ளனர். இருப்பினும், பிரிய மனமில்லாத இவர்கள், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, இதனைக் கண்ட காஜலின் சகோதரர்கள், அவர்கள் இருவரையும் கட்டி வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இருப்பினும், ஆத்திரம் தீராத சகோதரர்கள் இருவரையும் வெட்டிக்கொன்றுள்ளனர். பின்னர் யாருக்கும் தெரியாமல் இரு உடல்களையும் குழி தோண்டி புதைத்துள்ளனர்.
இந்த நிலையில், தனது மகனை மூன்று நாட்களாகக் காணாததால், அர்மானின் தந்தை ஹனீஃப் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் காஜலின் சகோதரர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில், தங்களின் தங்கையையும் அவரது காதலன் அர்மானையும் கொடூரமாகத் தாக்கியதையும், இருவரையும் கொன்று புதைத்துவிட்டதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அப்பகுதியில் மதக்கலவரம் ஏதும் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கையாகத் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/24/siren-police-2026-01-24-23-40-55.jpg)
இந்த சம்பவம் குறித்து, தகுந்த சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று நபர்களில், காஜலின் சகோதரர்களான ரிங்கு மற்றும் சதிஷ் ஆகிய இருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது. சம்பவத்தின் தீவிரத்தன்மை அறிந்து, காவல்துறை இந்த வழக்கில் துரிதமாகச் செயல்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/24/up-love-2026-01-24-23-40-06.jpg)