தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சிலர் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதால், அதனைத் தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு மாணிக்கம் பாளையத்தில் உள்ள அரசு மதுபானக்கடை அருகே ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisment

அப்போது, மதுபிரியர்களை குறித்து ஒருவர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்தார். அந்த நபரை கையும், களவுமாக பிடித்த போலீசார் விசாரித்தனர். அதில், வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த ஆசைத்தம்பி (35) என்பதும், தொடர்ந்து கேரள மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Advertisment