Lottery Martin's son starts a new party in puducherry
பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் புதுச்சேரியில், புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார்.
சமூக சேவராக இருந்து வந்த ஜோஸ் சார்லஸ், கடந்த ஓராண்டாக புதுச்சேரியில் ஜேசிஎம் என்ற அறக்கட்டளையை நடத்தி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். குறிப்பாக காமராஜர் நகர், முதலியார்பேட்டை உள்ளிட்ட 5 தொகுதிகளில் ஜேசிஎம் சார்பில் மதிய உணவுகளை அவர் வழங்கி வருகிறார்.
புதுச்சேரி அரசியலை மையப்படுத்தி தீவிர அரசியலில் இறங்கி வந்த அவர், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் களமிறங்க இருப்பதாகவும் அதற்காக தனிக் கட்சி துவங்கும் முடிவில் இருப்பதாகவும் தகவல் வெளியானது. குறிப்பாக காமராஜர் நகர் தொகுதியைக் குறிவைத்து அரசியல் காய்களை நகர்த்தி, தன்னுடைய அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார்.
இந்த நிலையில், தன்னுடைய ஜேசிஎம் அறக்கட்டளை என்பது ஒரு அரசியல் கட்சியாக மாறும் என்று ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில், புதுச்சேரியில் இன்று (14-12-25) காலை ‘லட்சிய ஜனநாயகக் கட்சி’ என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இதற்கான கொடியையும் அவர் இன்று அறிமுகப்படுத்தினார். இந்த கொடியை, துறைமுகத்தில் உள்ள கப்பலில் வந்து ஏராளமான தொண்டர்களுடன் அவர் கொடிக்கம்பத்தில் ஏற்றி அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து, இன்று பாண்டி மெரினா மைதானத்தில் இதற்கான அறிமுக விழாவும் துவக்க விழாவும் நடைபெற இருக்கிறது. இதில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பேச இருக்கிறார்.
Follow Us