Advertisment

எம் - சாண்ட் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து; மூவர் பலி!

kar-m-sand-lorry

கரூர் மாவட்டம் பரமத்தி மற்றும் தென்னிலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்குத் தயாரிக்கப்படும் எம் சாண்ட் மணல் மற்றும் பி சாண்ட் மணல்கள் கட்டுமான தேவைக்களுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். தென்னிலை அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியிலிருந்து இன்று (01.11.2025) காலை கட்டுமான தேவைக்காக எம் சாண்டை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது. 

Advertisment

அதன்படி இந்த டிப்பர் லாரியானது சின்னத்தாராபுரம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக இந்த லாரியானது கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அச்சமயத்தில் லாரியில் இருந்த 3 வட மாநில தொழிலாளர்கள் இந்த விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தென்னிலை காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisment

இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் மூவரும் சிக்கந்தர், அஜய், பிரபாகர் என்பதும், வட மாநில தொழிலாளர்களான மூவரும் எம்சாண்ட் லோடு ஏற்றி சென்றபோது டிப்பர் லாரியின் மேல் பகுதியில் அமர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான போது எம் சாண்ட் மணல் குவியலில்  சிக்கி மூவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. 

அதே சமயம் இந்த விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் சந்திரகுமார் மற்றும் மற்றொரு வடமாநில தொழிலாளர் ஜேம்ஸ் ஆகிய இருவரும் நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் உயிர் தரப்பியுள்ளனர் இவர்கள் இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எம் சண்ட் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கரூர் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

north indian incident lorry karur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe