இந்தியாவில் இருந்து புனித ஹஜ் பயணமாக சவுதி அரேபியா சென்ற யாத்ரீகர்கள் 42 பேர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 
Advertisment
நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இருந்து புனித ஹஜ் பயணமாக சவுதி அரேபியா சென்ற யாத்ரீகர்கள் மெக்காவிலிருந்து மதீனா நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருந்த போது ஜோரா என்ற இடத்தில் டீசல் டேங்கர் லாரி மீது யாத்ரீகர்கள் பயணித்த பேருந்து மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
Advertisment
அப்போது லாரியில் இருந்து டீசல் கசிந்த நிலையில் பேருந்து தீப்பற்றி எரிந்துள்ளது. பேருந்தில் இருந்த அனைவரும் உறக்கத்தில் இருந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அனைவரும் இந்தியர்கள் என்பதும் குறிப்பாக தெலுங்கானா மாநிலம்ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் குறித்து அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநில அரசு இதை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் தெலுங்கானா மாநில முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். புனித பயணம் சென்ற யாத்திரீகர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.