தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் மறைந்த விஜயகாந்த்தின் 2ஆம் ஆண்டு குருபூஜை வரும் 28ஆம் தேதி (28.12.2025)  நடைபெற உள்ளது. இதனையொட்டி அக்கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜயகாந்த்தின் 2ஆம் ஆண்டு குருபூஜையில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதனையொட்டி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் சந்தித்து நேரில் அழைப்பிதழை வழங்கினார். அதனைத் தொடர்ந்து எல்.கே. சுதீஷ் செய்தியாளர்களைச் சந்தித்து அளித்த பேட்டியில், “இன்று முதல் அழைப்பிதழை நேரடியாகக் கொடுக்க உள்ளோம். இன்றைக்கு அரசியல் சார்ந்து எதுவும் பேசவில்லை. அதிமுக நிர்வாகிகள் உள்ளே இருந்தார்கள். விஜயகாந்த்தின் குரு பூஜைக்கு அழைப்பிதழ் கொடுத்தோம். வேறு எதைப் பற்றியும் பேசவில்லை. 

Advertisment

கூட்டணி நிலைப்பாடு குறித்து பிரேமலதா விஜயகாந்த் பத்திரிகை சந்திப்பில் தெளிவாகக் கூறியுள்ளார். எல்லா கட்சிகளுக்கும் அழைப்பிதழ் கொடுக்க உள்ளோம். தமிழக முதலமைச்சருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுக்க உள்ளோம். குரு பூஜை என்பது தேமுதிக தொண்டர்கள் அனைவரும், விஜயகாந்த்தை குருவாக ஏற்றுத் தமிழகத்தில் இருக்கின்ற லட்சக்கணக்கான தொண்டர்கள் அன்று காலை 5 மணியளவில் கோவிலிற்கு வந்து அவருடைய விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். 

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. பாட்டுக் கச்சேரி  இருக்கிறது” எனப் பேசினார். அதனைத் தொடர்ந்து எல்.கே. சுதிஷ், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இல்லத்தில் அவரைச்  சந்தித்து விஜயகாந்த்தின் 2ஆம் ஆண்டு குருபூஜைக்கான அழைப்பிதழை வழங்கினார். 

Advertisment