'Lions only come out to hunt, not to have fun' - Vijay's speech Photograph: (tvk)
மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று (21.08.2025) தொடங்கி நடைபெற்றது. சுமார் 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டு அக்கட்சி நிர்வாகிகள், முன்னணி தலைவர்கள் அமர்வதற்கு 200 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதற்கிடையே மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரல் வெளியாகியது. அதன் பிறகு கட்சிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரையும் மாநாடு முறைப்படி தொடங்கியது. இந்த மாநாட்டு மேடையில் கட்சியின் விஜய்யின் பெற்றோரான எஸ்.ஏ.சந்திரசேகர் - சோபாவுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உரையாற்றினர்.
இறுதியாக கட்சியின் தலைவர் விஜய் பேசுகையில், ''ஒருமுறை சிங்கம் கர்ஜித்தது என்றால் அந்த சத்தம் சுமார் எட்டு கிலோமீட்டருக்கு எல்லா திசைகளும் அதிரும். அப்படிப்பட்ட அந்த சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் வெளியே வரும். வேடிக்கை பார்ப்பதற்கு வெளியேவராது. வேட்டையில் கூட உயிரோடு இருக்கும் மிருகங்களை தான் வேட்டையாடும். பெரும்பாலும் தன்னைவிட பெரிய சைஸ் உள்ள மிருகங்களை தான் வேட்டையாடும். தாக்கும், ஜெயிக்கும்.
எவ்வளவு பசியில் இருந்தாலும் உயிர் இல்லாத கெட்டுப் போனதை தொட்டுப் பார்க்காது. அப்படிப்பட்ட இந்த சிங்கம் அவ்வளவு ஈசியாக எதையும் தொடாது. தொட்டா விடாது. காட்டினுடைய நான்குபுறமும் தன்னுடைய பவுண்டரியை வைக்கும். சிங்கம் அப்படித்தான் காட்டையே தன்னுடைய கண்ட்ரோலில் வைத்திருக்கும். சிங்கத்திற்கு கூட்டத்தோடு இருக்கவும் தெரியும் தனியா இருக்கவும் தெரியும். அப்படியே தனியா வர வேண்டும் என நினைத்தாலும் அஞ்சாமல் அலட்டிக்காமல் சும்மா கெத்தா தனிய வந்து அத்தனை பேருக்கும் தண்ணி காட்டும். எப்போதும் எதிலும் தன்னுடைய தனித்தன்மையை இழக்கவே இழக்காது. சிங்கம் என்றுமே சிங்கம்.
வேற்று விளம்பரம் மாடல் திமுக என்ன செய்கிறது என்று தெரியுமில்ல. பாஜகவுடன் உள்ளுக்குள் ஒரு உறவை வைத்துக் கொண்டு வெளியில் எதிர்ப்பதுபோல எதிர்ப்பது. எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ''போங்க மோடி'' என பலூன் விடுவது. ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது குடைபிடித்து கும்பிடு போடுவது. இது மட்டுமா ஒரு ரெய்டு என வந்துவிட்டது. போகாத ஒரு மீட்டிங்கை காரணம் காட்டி டெல்லிக்கு போவது. அங்க ஒரு சீக்ரெட் மீட்டிங் நடத்துவது. நல்ல நோட் பண்ணணும் மக்களே அந்த மீட்டிங்கிற்கு அப்புறம் அந்த இஷ்யூ அப்படியே காணாமல் போய் இருக்குமே. அதுதான் ஸ்டாலின் அங்கிள் இட்ஸ் வெரி ராங் அங்கிள்.
சும்மா சினிமாக்காரன் சினிமாக்காரன் என்று சொல்வது. அம்பேத்கரை தோற்கடித்தது சினிமாக்காரன் அல்ல ஒரு அரசியல்வாதி. காமராஜரை விருதுநகர் தொகுதியில் தோற்கடித்தது சினிமாகாரன் அல்ல இன்னொரு அரசியல்வாதி. நல்லக்கண்ணு ஐயாவை தோற்கடித்தது சினிமாக்காரங்க அல்ல அரசியல்வாதி. இப்படிப்பட்ட நல்ல தலைவர்களை எதிர்த்து நின்று தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது சினிமாக்காரன் அல்ல அரசியல்வாதி.
எல்லா அரசியல்வாதிகளும் அறிவாளி கிடையாது. எல்லா சினிமாக்காரர்களும் முட்டாளும் கிடையாது. எம்ஜிஆருடன் பழகு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் விஜயகாந்த் உடன் பழக. எனக்கு வாய்ப்பு கிடைத்தது அவரும் இந்த மதுரை மண்ணைச் சேர்ந்தவர் தானே. அவரை மறக்க முடியுமா? மக்களாட்சிக்கான அச்சாரத்தை மக்கள் சக்தியை அணியாக நாம் நம்முடன் வைத்திருக்கும் பொழுது இந்த அடிமைக் கூட்டணியில் சேர்வதற்கான அவசியம் நமக்கு எதற்கு?
இப்பொழுதும் சொல்கிறேன் நம்மை நம்பி வருபவர்களுக்கு ஆட்சியில் அதிகாரத்தில் பங்களிப்பு செய்யப்படும். 2026 இல் இரண்டு பேருக்கு இடையேதான் போட்டி ஓன்று டிவிகே இன்னொன்று டிஎம்கே. ஒரு காலம் வரும் நம் கடமை வரும் அந்த கூட்டத்தை ஒழிப்பேன். மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுக்கலாமா? யாருக்கு எதிராக என்று தான் கேட்கிறீர்கள்? வேறு யாரு மறைமுக உறவுக்காரர்கள் ஆன பாசிச பாஜகவும், பாய்ஸன் திமுகவும் தான். மக்களை ஏமாற்ற நேரடியாக பாசிச பாஜக அடிமைக் கூட்டணி ஒன்று. அடுத்து உங்களுடைய மைனாரிட்டி ஆட்சியை ஓட்டுவதற்காக மறைமுக அடிமை குடும்பம் என இன்னொரு கூட்டணி. கட்சிகளை மிரட்டி அடிபணிய வைத்து 2029 வரைக்கும் சொகுசுப் பயணம் போயிடலாம் என்று திட்டம் தீட்டி வைத்திருக்கிறீர்கள். என்னதான் நீங்கள் நேரடி, மறைமுக கூட்டணி என குட்டிக்கரணம் போட்டாலும் தாமரைகளில் தண்ணீரே ஒட்டாது தமிழக மக்கள் எப்படி ஓட்டுவார்கள்'' என்றார்.