'Life is ruined by dust...' - 60 hill tribe villagers worried Photograph: (vellore)
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட ஒடுக்கத்தூர் அடுத்த ஜவ்வாது மலைத் தொடரில் அமைந்துள்ளது பீஞ்சமந்தை, ஜார்தான் கொள்ளை, பாலாம்பட்டு உள்ளிட்ட மூன்று மலைக் கிராம ஊராட்சிகள். இதில் தொங்கு மலை, கட்டிப்பட்டு, கோனூர், குண்டு ராணி, எள்ளுப்பாறை, பெரிய பணப்பாறை, தேந்தூர், எலந்தம்புதூர், குப்சூர் என சுமார் 60 க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. வானம் பார்த்த பூமியான இங்கு பிரதான பயிராக சிறுதானிய வகையைச் சேர்ந்த சாமை பெருமளவில் பயிரிடப்படுகிறது. இதனை அறுவடை செய்வதன் மூலம் மலை வாழ் மக்களின் உணவு மற்றும் பொருளாதார தேவை பூர்த்தியாகிறது. அதை நம்பியே அம்மக்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த வடகிழக்கு பருவமழையால் மலைக் கிராமங்களில் பயிரிட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 200 ஏக்கருக்கு மேலான சாமை பயிர்கள் தலை சாய்ந்து நீரில் மூழ்கியதால் மலை வாழ் மக்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேர்ந்துள்ளது. அப்படியே விட்டால் அழுகி பாழாகிவிடும் என்பதால் மாடுகளுக்காவது தீவனமாக பயன்படுத்த கவலை தோய்ந்த முகத்தோடு சாமையை அறுவடை செய்து வருகின்றனர் மலைவாழ் மக்கள்.
Follow Us