சிதம்பரம் முழுநேர கிளை நூலகத்தில் 58 வது தேசிய நூலக வார விழா, மாவட்ட மைய நூலகம் மற்றும் சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சிதம்பரம் நூலக வாசகர் வட்டம் ஆகியோர் சார்பில் இணைந்து கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சங்கத்தின் மண்டல துணை ஆளுநர் புகழேந்தி, சாசன தலைவர் முகமது யாசின், முன்னாள் தலைவர் கிரீடு நடனசபாபதி, வாசகர் வட்ட தலைவர் சந்திரசேகரன், துணை தலைவர் சிவாகண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட மைய நூலக அலுவலர் முருகன், சமூக ஆர்வலர் சண்முகசுந்தரம், ராகவேந்திரா கல்வியியல் கல்லூரியின் முதல்வர் கஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு நூலகத்தின் சிறப்பு, மாணவர்கள் செல்போன் மற்றும் சமூக வலைதளங்களை நோக்கி செல்வதால் எவ்வாறு மனதளவில் எவ்வாறு பாதிப்பு ஏற்படுகிறது, ஒரு நூலை வாசித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்தும், நூலகத்தின் வளர்ச்சி விளக்கி பேசினார்கள்.
ரோட்டரி சங்கத்தின் 23 உறுப்பினர்கள் நூலகத்தின் புதிய புரவலர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர். அதேபோல் நூலகத்திற்கு வருகை தரும் மாணவர்கள் புதிய உறுப்பினர்களாக தங்களை இணைத்து கொண்டனர். அவர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை நூலக புரவலர் சண்முகசுந்தரம் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து சிதம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புற நூலகங்களில் பணியாற்றும் 27 நூலகர்களுக்கு அவர்களின் சேவையை பாராட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் பொருளாளர் கோவிந்தராஜன், மதியழகன், சிதம்பரம் கிளை நூலகர்கள் அருள், சிவப்பிரகாசம் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சங்கத்தின் சாசன தலைவர் முகமது யாசினை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியர் கர்ணன், அவர் கூட்டத்தில் அமர்ந்து இருப்பது போன்ற ஓவியத்தை வரைந்தார். இதனை சங்கத்தின் தலைவர் வெளியிட்டார். முகமது யாசின் பெற்றுக்கொண்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/27/lib-2025-11-27-21-48-10.jpg)