சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினைச் சந்தித்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (27.02.2026) தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். மேலும், அதிமுக முன்னாள் எம்.பி.யும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி. ரவிந்தரநாத், ஓ.பன்னீர்செல்வத்தின் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பனும் திமுகவில் இணைத்துக் கொண்டனர். 

Advertisment

அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற  உறுப்பினர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவை செயலாளர் சீனிவாசனைச் சந்தித்து ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா கடிதத்தை அளித்தார். அதே போன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை   ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளரான ஐயப்பனும் ராஜினாமா செய்தார்.

Advertisment

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இனைந்தது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான ஓ.பன்னீர்செல்வம் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன். திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார். 

ops-mks-dmk-join-1

2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் திமுக கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர். அவரது வரவு நல்வரவாகட்டும். தமிழ்நாடு வெல்லட்டும். வெல்வோம் ஒன்றாக” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisment