Advertisment

சங்கமிப்போம்....சங்கொலிப்போம் - அன்போடு அழைத்த துரை வைகோ எம்.பி!

M vai

செப்டம்பர் 15 இன்று  திமுக நிறுவனரும் முன்னாள் தமிழக முதல்வருமான அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று திருச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் அக்கட்சியில் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ எம்.பி அண்ணா பிறந்தநாள் வாழ்த்தும் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisment

தந்தை பெரியார் வகுத்தளித்த சமூகநீதியை தமிழ்நாட்டின் குணமாக சட்டமாக்கியவர், தான் கற்ற கல்வியை, பெற்ற அறிவை கொண்டு தமிழ்நாட்டின் தனித்துவமான திசை வழியை தன் உழைப்பின் ஊடாக கட்டமைத்தவர், குரலற்ற தமிழனின் தனித்துவமான புதிய குரலாக உயர்ந்த சபைகளில் ஓங்கி ஒலித்தவர், இந்தியாவிற்கே வழிகாட்டும் இயக்கமாய் திராவிட இயக்கத்தை அடையாளப் படுத்தி வழிகாட்டியவர், கட்சியாக கட்டமைத்தவர், எளிமையின் கம்பீரத்தோடு சிகரம் தொட்டவர், தமிழனுக்கு பாதுகாப்பு திராவிட அரசியல்தான் என்று அடித்தளமிட்டவர் என பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் சிறப்புகளை நாம் சொல்லிக்கொண்டே செல்லலாம்.

Advertisment

அப்பேர்ப்பட்ட தென்னாட்டு பெர்னாட்ஷா, திராவிடப் பேரொளி பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்தநாள் செப்டம்பர் 15ல், இன்று சிறுகனூர், திருச்சியில், மறுமலர்ச்சி திமுக நிமிர்ந்த நடையோடு, நேர்கொண்ட பார்வையோடு, மாமனிதர், இயக்கத் தந்தை, தலைவர் வைகோ அவர்களின் கரம் பற்றி கொண்டாடி மகிழும் மாநாடாக நாம் நடத்த உள்ளோம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிரமாண்டமாக செய்துள்ளோம். இந்த மாபெரும் மாநாட்டில் இன்று மாலை நாம் சந்திக்க உள்ளோம்.

உங்களில் சிலர் இந்நேரம் திருச்சியை நோக்கி புறப்பட்டிருப்பீர்கள். சிலர் வந்து சேர்ந்திருப்பீர்கள். உங்கள் ஒவ்வொருவரையும் மாநாட்டு திடலில் முகமலர்ச்சியோடு காண தலைவரும் நானும் ஆவலோடு காத்திருக்கிறோம். பாதுகாப்பின் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி, மாநாட்டு பந்தலுக்கு உரிய நேரத்தில் வெற்றிமுகத்தோடு வந்து சேருமாறு உங்கள் ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கிறேன். வாருங்கள், தலைவரின் திருமுகத்தைக் கண்டுகளிப்போம்; அவரின் திருக்குரலை கேட்டு உணர்ச்சி பெறுவோம்! வாருங்கள், அண்ணா பிறந்த நாள் வெற்றி மாநாட்டில் சங்கமிப்போம்; மறுமலர்ச்சி திமுகவின் வெற்றி முழக்கத்தை சங்கொலிப்போம்!

dmdk Duraivaiko vaiko
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe