'Let us be proud of being Periyar's heirs' - Deputy Chief Minister Udhayanidhi Stalin Photograph: (dmk)
செப்டம்பர் 17 இன்று திராவிடர் கழகத்தின் முன்னாள் தலைவரும், மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூகநீதி போராளியுமான தந்தை பெரியாரின் பிறந்தநாள். பல்வேறு அரசியல் தலைவர்களும் அவரது நினைவைப் போற்றி வருகின்றனர். முன்னதாக பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை… என தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதற்குமான கொள்கைளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார்.
'மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு' என்று உரத்துச்சொல்லி நம் வாழ்வியலை வடிவமைத்த தந்தை. கொள்கை உரமூட்டி- எதிர்கால லட்சியங்களுக்கு துணை நின்று- திராவிடம் என்னும் கருத்தியலின் முழுவடிவமாய்த் திகழும் பெரியாரின் வாரிசுகள் நாம் என்பதில் பெருமை கொள்வோம்!
சுயமரியாதைச் சுடர், அறிவாசான் தந்தை பெரியாரின் பிறந்தநாளில் கழகத் தலைவர் தமிழக முதலமைச்சர் வழியில் சமூகநீதிப் பயணம் தொடர உறுதியேற்போம்! ' என தெரிவித்துள்ளார்.