dmk Photograph: (trichy)
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஒருவழியாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் அறிக்கை, பரப்புரை என அடுத்தகட்ட நடவடிக்கைகளில் திமுக இறங்கியுள்ளது.
Advertisment
நாளை மறுநாள் திருச்சியில் திமுக மாநாடு நடைபெறும் நிலையில் தொண்டர்களுக்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், திருச்சி குலுங்கட்டும் திமுக வெல்லட்டும். சிறுகனூர் மாநாடு வரலாறு படைக்கட்டும் என தெரிவித்துள்ள தமிழக முதல்வர், 'அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறி இருக்கும். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைக்கும் உறுதியோடு தேர்தல் களத்தில் பணியாற்றும் பாசறையாக மாநாடு விளங்கும். இந்தி திணிப்புக்கு இன்று மட்டுமல்ல என்றுமே எதிர்ப்புணர்வை கொடுத்து உயிரைத் தியாகம் செய்து வெளிப்படுத்தியது திருச்சி.
Advertisment
அதிமுக ஆட்சிக்கால சீரழிவிலிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதையில் பயணம் செய்து வருகிறோம். தமிழ்நாடு மேலும் வளர்ச்சி அடைய திமுக அரசு தொடர் வேண்டும். உங்களைக் காணும் போது என் உழைப்பின் ஆற்றல் மேலும் பெருகும். உங்கள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்' எனத் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Follow Us