ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர் மலை கிராமம். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கால்நடைகளை வளர்ப்பதாகும். தொட்டகாஜனூர் மலை கிராமம் முன்பு ஒரு பெரிய கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரி மக்கள் நடமாட்டம் இன்றி செயல்படாமல் உள்ளது.

Advertisment

கல்குவாரி இந்த கல்குவாரியில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று சிறுத்தைகள் பதுங்கி இருந்து தொட்டகாஜனூர் மலை கிராமத்தில் அவ்வப்போது புகுந்து தொடர்ந்து ஆடு, மாடு, நாய்கள் போன்ற கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. மேய்ச்சலுக்கு விடப்படும் மாடு, ஆடுகளை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகளை இந்த சிறுத்தைகள் கொன்று குவித்துள்ளன. கால்நடைகள் வேட்டையாடி மீண்டும் கல்குவாரிக்குள் புகுந்து பதுங்கிக் கொள்கின்றன. இதனால் வனத்துறையினருக்கும் சிறுத்தைகளைப் பிடிக்கும் பணிப்பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கல்குவாரி வழியாக சென்ற ஒருவர் கல்குவாரியின் மத்தியில் 3 சிறுத்தைகள் ஒன்றாக அமர்ந்திருக்கும் காட்சிகளை தனது செல்போனில் பதிவு செய்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த காட்சி வைரலானது. இதனைப் பார்த்து இந்த பகுதி சேர்ந்த மலை கிராமம் மக்கள் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisment

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, எங்கள் மலை கிராம முன் பகுதியில் ஒரு பெரிய கல்குவாரி உள்ளது. இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லை. இந்தப் பகுதியில் தான் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக மூன்று சிறுத்தைகள் பதுங்கி இருந்து நாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளை தொடர்ந்து வேட்டை அடி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் சிறுத்தை கல்குவாரிக்குள் சென்று பதுங்கி விடுவதால் அவற்றை பிடிக்கும் பணி சவாலாக இருந்து வருகிறது. கோரிக்கை இதுவரை கிட்டத்தட்ட நூற்றுக்கு மேற்பட்ட கால்நடைகளை சிறுத்தைகள் போன்ற குவித்துள்ளன. எங்கள் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் பெரியவர்கள் மாலை 6 மணிக்கு பிறகு அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே வனத்துறையினர் உடனடியாக அச்சுறுத்தி வரும் மூன்று சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்கும் வேண்டும். சிறுத்தையால் இறந்த கால்நடைகளுக்கு அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.