மேச்சலில் இருந்த கன்றுக்குட்டியை கடித்துக் குதறிய இரண்டு சிறுத்தைகள்- பட்டாசு பானம் விட்டு விரட்டும் பணியில் வனத்துறையினர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அம்சநாதன். இவர் அதே பகுதியில் 20-க்கும் மேற்பட்ட பசு மாடுகள் மற்றும் ஆடுகள் வைத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை விவசாய நிலத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த கன்றுக்குட்டியின் அலறல் சத்தம் கேட்ட விவசாயி அங்கே சென்று பார்த்த போது இரண்டு சிறுத்தைகள் கன்றுக்குட்டியை கடித்து குதறியதை கண்டறிந்து கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.
விவசாயின் கூச்சல் சத்தத்தை கேட்ட இரண்டு சிறுத்தைகள் அங்கிருந்து வனப்பகுதிக்கு சென்றுள்ளது. இது குறித்து அம்சநாதன் பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து சிறுத்தையை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்டி வருகின்றனர். தொடர்ந்து பேரணாம்பட்டு சுற்று வட்டாரப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து ஆடு, மாடுகளை கடித்து குதறி வருவதால் வனப்பகுதி ஒட்டி உள்ள விவசாயிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
Follow Us