வேலூர் மாவட்டம், குடியாத்தம், பிச்சனூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்தி கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சேஷாந்த் (வயது 20) ஆகியோருக்கு இடையே கடந்த மாதம் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஏற்பட்ட தகராறு வாக்குவாதமாக மாறி, கைகலப்பு ஏற்பட்டது.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இன்று சேஷாந்த் கஞ்சா போதையில் கார்த்தியின் வீட்டிற்குச் சென்று, வீட்டில் இருந்த வாஷிங் மெஷின், டிவி உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதாகவும், வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர காவல்துறையினர், அரைகுறை ஆடையில் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன் விரோதம் காரணமாக பட்டப்பகலில் இளைஞர் அரைகுறை ஆடையில் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இளைஞர் ரகளையில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.