காட்டுமன்னார் கோவில் அருகே குமராட்சி கடைவீதியில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியதை கண்டித்து சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
குமராட்சி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரகாஷ் மாவட்ட துணை செயலாளர் மணி உள்ளிட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கட்சியினர் கலந்து கொண்டு 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியதை கண்டித்து கோஷங்களை எழுப்பியும் சட்டம் மசோதா நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/18/11-2025-12-18-17-07-09.jpg)